இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான் 2 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துதாக என்ற எண்ணம் எம்மிடம் இருந்தமை எமக்கு பெரிய கௌரவமாக இருந்தது.
ஆனால் தற்போது காசுக்காக விளையாடும் கலாச்சாரம் கிரிக்கெட்டில் உருவாகியுள்ளது. நாடு என்ற வகையிலும் கிரிக்கெட் விளையாடும் காலம் இல்லாமல் போய்விட்டது. பணம் முதலிடம் பெற்றதால் எமது கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையை மாற்றினால்தான் கிரிக்கெட்டை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
1 comment
Yes that’s true.
Comments are closed.