141
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி நலின் பெரேராவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்தே ஜனாதிபதி நலின் பெரேராவை நியமித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியமனத்தை பரிசீலிக்குமாறு அரசியலமைப்பு சபையை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நியமனம் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
Spread the love