உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என இன்று செய்திகள் வந்துள்ள நிலையில் இந்தியாவில் இணையதளச் சேவை முடங்குவதற்கு வாய்ப்பில்லை என இந்திய சைபர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தி இன்ரர்நெட் கோர்பரேஷன் ஒப் நேம்ஸ் அன்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல்வேறு இணையதள சேர்வர்களும் தொடர்பு இழக்கக்கூடும் என ரஸ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று தகவல் தெரிவித்த் இந்திய சைபர் பாதுகாப்பு அதிகாரி குல்ஷன் ராய் அனைத்து ஏற்பாடுகளும் உரிய இடத்தில் உள்ளன, ஊடகங்களில் வளைய வரும் செய்தியைக் கண்டு பதற்றமடையத் தேவையில்லை. இந்தியாவில் இணையதளச் சேவை முடங்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.