இந்தியா தங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ம் திகதி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா லண்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போதே மேற்கணடவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுக்கு எதிராக செயல்படலாம் என நினைக்கும் எவருக்கும், எங்களின் வலிமை மீது சந்தேகம் வர வேண்டாம் எனத் தெரிவித்த அவர் நாட்டில் ஜனநாயகத்தினை வலுப்படுத்த ராணுவம் விரும்பியதாலேயே பொதுத் தேர்தல் மிக வெளிப்படையாக நடைபெறடறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸதானில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்களை மறுத்துள்ள அவர் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது எனவும் பாகிஸ்தானில் மோசம் நிறைந்த வி;யங்களை விட பல நல்ல முன்னேற்றங்கள் உள்ளன எனவும் இவற்றினை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.