வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு காடுகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள காடுகளில் வடக்கு காடுகளே அடர்த்தி கூடியதாக காணப்படுகின்றது. அங்கு முப்பது வருடங்களாக போர் நடந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், காடுகளை அழியாமல் பாதுகாத்திருப்பதாகவும் மைத்திரி தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் பிறந்தநாளின்போது, கேக் வெட்டாமல் மரங்களை நடுங்கள் எனவும் மரங்களை மற்றவர்களு்ககு அன்பளிப்பாக வழங்குங்கள் எனவும் இதன்போது ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.