ரஸ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி 20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக புட்டின் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது எனவும் பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது எனவும் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி பிரச்சாரம் செய்து வருகின்றார்.
அத்துடன் இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்தநிலையில் மொஸ்கோ நகரில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அலெக்சி நவல்னி-யை கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த மாதம் 24-ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுப்பட்ட அவரை அவரை 20 நாள் சிறைக்காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவரது சிறைவாசம் இன்று நிறைவடைந்ததனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்