161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாகனங்களில் கழிவகற்றும் போது வலைகளால் மூடப்பட்டே கொண்டு செல்லப்பட்ட வேண்டும் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் அறிவுறுத்தி உள்ளார். அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
யாழ்.நகர் பகுதிகளில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் கழிவுகளை ஏற்றி செல்லும் போது வலைகள் போடப்படாமல் கொண்டு செல்லப்படுவதனால் அவை வீதிகளில் பறந்து வீதியால் செல்வோருக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. அது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வந்த நிலையில் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் மேற்கண்டவாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
Spread the love