அரசியலமைப்பு சீர்திருத்த சபை இந்த வாரத்தில் ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு சீர்திருத்த சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமித்த பின் அவர்கள் ஒன்று கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன் இதன்போது காவற்துறை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி 3 ஆண்டுகளுக்காக நியமிக்கப்பட்ட காவற்துறை ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும் புதிய உறுப்பினர்களை நியமிக்கும் வரையில் தற்போதைய உறுப்பினர்கள் காவற்துறை ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.