காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்துக்குமிடையியே தொடர்ந்து மோதல்நிலை காணப்பட்டு வருகின்ற நிலையில் பலஸ்தீத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது.
பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதேனை நோக்கமாக கொண்ட ஹமாஸ் இயக்கத்தினருக்கு பலஸ்தீன மக்களியே செல்வாக்கு அதிகம் உள்ளது. இந்நிலையில், காசா பகுதியில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்ற 24 பலஸ்தீனர்களை இஸ்ரேல் கடற்படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன் உயர் தேசிய குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் காசா கடற்பகுதியில் படகுகள் மூலம் பேரணியில் ஈடுபட்ட போது அவர்கள் மீது இஸ்ரேல் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டியிலேயே இவ்வாறு 24 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது