ஜெர்மனியில் புகையிரத நிலையம் ஒன்றில் பெண் ஒருவரை பணயக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் புகையிரத நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மைன்ஸ் (Mainz ) நகரில் உள்ள புகையிரத நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடையினுள் புகுந்த இனந்தெரியாத நபர் அங்கிருந்த ஒரு பெண்ணை பணயக்கைதியாக பிடித்து வைத்ததனையடுத்து புகையிரதநிலையம் மூடப்பட்டதுடன் புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்பட்டன .
அதன்பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டதுடன் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர். குறித்த பெண் சிறிது காயமடைந்திருந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் பயங்கரவாதத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரகைள மேற்கொண்டு வருகின்றனர்