காஷ்மீரில் உள்ள லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன ஹெலிடிகொப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன என இந்தோ – திபெத் எல்லைக் காவல்துறைப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு, லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து 5 நிமிடங்களுக்கு மேல் பறந்தததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பகுதிக்குள் சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி நுழைவது இது முதல் முறை அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 5 முறை சீன ஹெலிகொப்டர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை தமது எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் தயார் நிலையை நோட்டமிடவே சீன ராணுவத்தின் ஹெலிகொப்டர்கள் அவ்வப்போது அத்துமீறி வட்டமிடுகின்றன என இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீன ஹெலி கொப்டர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து வட்டமிட்டதும், அருணாச்சலில் சீன படைகள் அத்துமீறியதும் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.