இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குள் இடையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள, யோர்தான் கப்பலை பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டில் யோர்தான் நாட்டை சேர்ந்த குறித்த கப்பல், இயந்திரக் கோளாறு காணைமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு கடற்பரப்பில் கரைஒதுங்கியது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர், இப் பகுதி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. இராணுவத்தினர் இப் பகுதிக்கு மக்களை அனுமதிக்த்த பின்னர், பெருமளவான சுற்றாலப் பயணிகள் இக் கப்பலை பார்வையிட்டு வந்தனர்.இந்த நிலையில் இரும்புக்காக இக் கப்பலின் பாகங்கள் அகற்றி எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீகுதிப் பகுதியை பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.