துருக்கி சென்று காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. அவரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் துருக்கி மற்றும் சவூதி அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பிரகாரம், ஜமால் கஷோக்கியை தூதரகத்திற்குள்ளேயே சவூதி முகவர்கள் கொலை செய்து அவரது உடலை அங்கிருந்து அகற்றியுள்ளனர் என துருக்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஜமாலின் கொலை தவறாக நடந்துவிட்டது என தெரிவிப்பதற்கு சவூதி அரேபியா தயாராகி வருகின்றதென சீ.என்.என் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ள நிலையில் சவூதி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான ஜமால் கஷோக்கி கடந்த 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்குச் சென்ற பின்னர் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது