இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனின் படையெடுப்புக்கு நோர்வே உள்ளானபோது, ஜெர்மன் ராணுவத்தினருடன் உறவில் இருந்த தங்கள் நாட்டுப் பெண்களை (நோர்வே பெண்களை), பழிவாங்கும் முகமாக மோசமாக நடத்தியதற்காக நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏப்ரல் 1940இல் நாஜி ஜெர்மன், நோர்வே மீது படையெடுத்த போது ஜெர்மன் ராணுவத்தினருடன் சுமார் 50,000 நோர்வே பெண்கள் நெருக்கமான உறவில் இருந்ததாக அப்போது கருதப்பட்ட நிலையில் அவர்களில் பல பெண்கள், அவர்களது குழந்தைகளுடன் நோர்வேயை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஜெர்மன் ராணுவத்தினருடன் நெருக்கமாக இருந்த பெண்களுக்கு ஏறத்தாள 10 முதல் 12 ஆயிரம் வரையிலான குழந்தைகள் பிறந்ததாக கணிப்பிடப்படுகிறது. பின்னாளில் இந்தக் குழந்தைகள் பலர் குடும்பங்களை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக வஞ்சிக்கப்பட்டதாகவும், பெண்களின் அடிப்படை உரிமைகளை நோர்வே மீறியதாகவும், மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம் சுமத்தி இருந்தன.
இந்தநிலையில் தற்போது நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க், நோர்வேயின் கடந்த கால செயற்பாடு குறித்து பெண்களிடம் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.