மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் கானலோ அல்வரேஸ் (Canelo Alvarez) உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி சுமார் 365 மில்லியன் டொலர் சம்பாதிக்க உள்ளதாகவும் விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக பெறுமதியுடைய ஒப்பந்தம் என கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 365 மில்லியன் டொலர்களை கானலோ சம்பாதிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாசன் என்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனம் அடுத்த ஐந்து வருடங்களில் நடைபெறவுள்ள 11 போட்டிகளுக்கு கானலோ வுடன் இந்த 365 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை செய்துள்ளது.
கால்பந்து நட்சத்திரங்கள் மெஸ்ஸி, நெய்மர் போன்றோர் 350 மில்லியன் டொலர் வரை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களை விட அதிகமான பெறுமதியான ஒப்பந்தத்தினை கானலோ செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.