262
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. அதன் போது பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் , ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி. ரகுராம் , ஊடக கற்கை விரிவுரையாளர்கள் , மாணவர்கள் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.
Spread the love