கடந்த வாரம் மண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்கான காணியையும் பார்வையிட்டார். இது தொடர்பான கூட்டம் டிக்கோயா ‘ட்ரஸ்ட்’ தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றபோது அரசாங்க அதிபர் ரோகன புஷ்பகுமார, உதவி அரசாங்க அதிபர் ஏ. சுமனசெகர, பெருந்தெருக்கள் திணைக்களத்தின் பிரதான பொறியிலாளர் திலகரத்ன,தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் பிரதான பொறியியலாளர் கலாநிதி ஜெயதிஸ்ஸ, மற்றும் முன்னாள் மாகாண சபை உறுபினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.