அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக விசேட சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக சட்ட மா அதிபரின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவுள்ளது.
குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், சட்ட மா அதிபர் சார்பில் சார்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மன்னிலையகவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேர்; குறித்த சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதா என்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இரகசியமான முறையில் சபாநாயகருக்கு தெரிவிப்பதாக இன்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது