ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் சாங் ஷாவ்சுன் (Zhang Shaochun ) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி க்சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பல முன்னாள் அமைச்சர்களையும் , முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளையும் லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை அமைச்சர் சாங் ஷாவ்சுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது