ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அரசில் துணைப் பிரதமராக பதவி வகித்த அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழும் முஐறப்பாடு செய்யப்பட் நிலையில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நெற்றையதினம் அவரை கோலாலம்பூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அவரை 2 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.