ரஸ்யாவுக்குள் உள்நுழைந்து உளவு பார்த்ததாக அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவரை தலைநகர் மொஸ்கோவில் வைத்து அந்நாட்டு ரகசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கரான போல் நிக்கலஸ் வெலான் (Paul Nicholas Whelan) என்னும் குறித்த நபரை ரஸ்ய ரகசிய காவல்துறையினர் கடந்த 28-ம் திகதி கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால்; மேற்கொண்டு எவ்வித விபரங்களும் வெளியாகவில்லை.
ரஸ்யாவுக்கு எதிரான நாசவேலை மற்றும் சதிச்செயலில் ஈடுபட்டதாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டால் சுமார் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது