176
கிழக்கு பல்கலைக் கழகத்தில் சேவையாற்றிய மூத்த பணியாளர்களைக் கௌரவிக்கும் ‘அதியுன்னத சேவை நலன் விருது வழங்கலும், ஓய்வு பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(1) கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக சேவையில் 35 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய 9 பேருக்கு தங்க விருதும், 30 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய 3 பேருக்கு வெள்ளி விருதும், 25 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய 11 பேருக்கு வெண்கல விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் 10 பேரும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடத்தினதும் முதல் நாளில் இவ்வாறான கௌரவிப்பை கிழக்கு பல்கலைக்கழகம் நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாறுக் ஷிஹான்
Spread the love