ஏமனில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவினை எடுப்பதனை ஹவுத்தி கிளர்ச்சியர்கள் அதனை நிறுத்திட வேண்டுமென உலக உணவு திட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் ஏமன் தலைநகர் சானாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட உணவு இன்னமும் வழங்கப்படவில்லை என்பதனை கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உணவு விநியோக மையங்களில் இருந்து அதற்கு உரிய வாகனங்கள் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் உணவு பொருட்கள் வெளிச்சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துளள் ஹவுத்தி கிளர்ச்சியர்கள் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் உணவினை தாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளனர்.
ஏறக்குறைய 2 கோடி பேர் ஏமனில் உணவு பஞ்சத்தால் தவிப்பதாகவும், அதில் ஒரு கோடி பேருக்கு தாங்கள் எப்போது அடுத்த வேளை உணவை வழங்கப் போகிறோம் என்பது தெரியாதுள்ளதாக என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது
ஏமனில் ஏறக்குறைய 50 லட்சம் குழந்தைகள் வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவ் த சில்ரன் அமைப்பு முன்பு எச்சரித்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.