அமெரிக்கா தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் புதிய வழியை வடகொரியா தேர்ந்தெடுக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவருடத்தினையொட்டி ஆற்றிய உரையின் போதே வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளின் முன்னிலையில் தங்கள் நாட்டுக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா ஒருவேளை செய்யத் தவறி தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், தாமும் அமெரிக்காவுக்கு வழங்கிய உறுதி மொழிகளைக் கைவிட்டு இறையாண்மையைப் பாதுகாப்ப புதிய வழிகளைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் கிம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என தென் கொரிய முன்னாள் அமைச்சர் கிம் யங் சியோக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.