151
தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பங்களாதேஸ் நாட்டினைச் சேர்ந்த இருவரையும் 07 நாட்கள் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் இவ்வாறு அனுமதி வழங்கியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே மிகப்பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த 31ம் திகதி கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து சுமார் 278 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love