ஊடக சுதத்திரத்தில் 2017ஆம் ஆண்டு 141வது இடத்தில் இருந்த இலங்கை 2018ம் ஆண்டில் 131வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . உலக பத்திரிகை சுதந்திர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது
இந்ம அறிக்கைக்கமைய உலகில் முதலாவது ஊடக சுதந்திரம் உள்ள நாடாக நோர்வே உள்ள நிலையில் ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாக உள்ள நாடாக எரித்திரியா அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கும் அதேவேளை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இலங்கையையும் விட மேலிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது