230
யாழ் மாவட்ட இளைஞர் முஸ்லிம் வாலிப சங்க கிளை அலுவகத்தின் (YMMA) ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் ஜனாப் சேகு ராஜிது தலைமையில் நேற்று(2) நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை இளைஞசர் முஸ்லிம் வாலிப சங்கத்தின் நிர்வாக நிலை ஆலோசகரும் கல்வி அமைச்சின் ஆலோகரும் சமாதான நீதிவான் ஆகிய எம்.எஸ் ரஹீம் கலந்து கொண்டு முதற்கட்டமாக 70 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார்.
இதன் போது புதிய ஆண்டில் யாழ் மாவட்டத்தின் ஒஸ்மானியக்கல்லூரி மற்றும் கதீஜா கல்லூரி மற்றும் மண்கும்பான் இடைநிலை பாடசாலைகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 300 மாணவர்களுக்கும் இக்கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இளைஞர் முஸ்லிம் வாலிப சங்க கிளை அலுவகத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.எச்.நசீர் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்
Spread the love