மாலியில் வேட்டைக்காரர்கள் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் உள்ள கோலோகன் என்னும் கிராமத்தில் புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலோகன் கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த வேட்டைக்காரர்கள் அங்குவசிக்கும் பழங்குடியின மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது