ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கரங்கள், ஏற்கனவே ஊழலில் தோய்ந்துள்ளது. அதே பாணியில் நேர்மையான மோடி அரசை களங்கப்படுத்த ஊழல் புகார் சுமத்தப் பார்க்கிறது. போபர்ஸ் ஊழலில் சிக்கிய காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரபேல் விமான விவகாரத்தில், உச்சநீதிமன்றம் திருப்தி அடைந்து விட்டதாக கூறியுள்ள நிலையில் அதனை சவாலுக்குட்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.