அமெரிக்க காங்கிரசின் 116வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையொட்டி இன்றையதினமான ஜனவரி 3ஆம் திகதி அமெரிக்கா வரலாறு படைக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 2016ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் லட்சக்கணக்கான மகளிர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இடைக்கால தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கப் பல பெண்கள் முன்வந்திருந்தனர். இது அதற்கு முந்தைய ஆண்டு, அந்தக்கட்சியில் பெண்களின் நிலைப்பாட்டுக்கு எதிர்மாறாக அமைந்திருந்தது.
அமெரிக்காவில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெண் செனட்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக காணப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் 2018ஆம் ஆண்டை பெண்களின் ஆண்டு என பரிந்துரைக்கும் அளவிற்கு இது மாறியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது