சேர் மார்க்ஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பவற்றை, எவரிடமும் ஒப்படைக்கப் போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், குறித்த அலுவலகமும் இல்லமும், எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு கிடைக்காத நிலைமை தோன்றியுள்ளதாக, மகிந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாளுமன்றத்தில், இன்னமும் எதிர்க்கட்சித் தலைமை, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடமே காணப்படுகின்றதென்னும் நிலைப்பாட்டுக்கு அமைய, கூட்டமைப்பு, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.