ஒட்டுசுட்டானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு…
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்துள்ளார்.
இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு உதவி பொருட்களை வழங்கிவைத்துள்ளார்.
மக்களின் வீட்டுப்பாவனைக்கு தேவையான அத்தியவசியபொருட்கள் மெத்தை நுளம்புவலை, விளக்குமாறு, தும்புத்தடி, மொப்பர், தண்ணீர்கான், பாய்,தலையணை, போர்வை, துவாய் உள்ளிட்ட சிறுவர்களுக்கு தேவையான பொருட்களும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கொப்பிகள்,புத்தகபை உள்ளிட்ட பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை 200 குடும்பத்தலைவிகளை கொண்டவர்களுக்கும்,250 பாடசாலை மாணவர்களுக்கும்,40 சிறுவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா,மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன்,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான உதவிப்பொருட்களை வழங்கிவைத்துள்ளார்கள்.