ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நேற்று தமிழக அரசின் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணி தங்கள் தரப்பு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் முறைப்படி பட்டியலிடும் போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்