பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் அண்மைக்காலமாக கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
காகம் தலையில் எச்சமிட்டது என்பதற்காக காகங்களை சுட்டுக் கொல்லச் சொன்ன பொன்சேகா, அப்பத்தை ஒழுங்காக சுடவில்லையென சிப்பாய்களை முழந்தாளிடச் செய்த பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த பொன்சேகா தன்னை இழிவாக பேசுவதா என பாலித தெவரபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை மூளை இல்லாவிடில் உடம்பை பெரிதாக வைப்பதில் அர்த்தமில்லை, கடற்படையில் சாரதியாக இருந்து தப்பியோடியவர் தெவரபெரும. இப்படியானவர்களை அரசியலுக்கு வரவிடக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இருவரும் மாறிமாறி பரஸ்பர கருத்துமோதல்களை மேற்கொள்கின்ற நிலையிலேயே பிரதமர் ஊடகங்கள் முன் இருவரும் இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.