புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை இரண்டாக்கும் செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு தமது தரப்பினர் இடமளிக்கப் போவதில்லை எனவும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டை இரண்டாக்கும் கூட்டமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்கப் போவதில்லை எனவும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கூட்டமைப்பு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில், பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு வரைபு தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு பதில் அளித்துள்ளார்.