இந்தியாவிலிருந்து ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ளது. அடைக்கலம் தேடி வந்தவர்களை இவ்வாறு திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஐ.நாவின் அகதிகளுக்கான ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த அகதிகள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என இந்தியா தெரிவித்திருந்தது. அத்துடன் ரோகிங்கியா முஸ்லிம்கள் 7 பேர் மற்றும் மியன்மாரின் ரக்கின மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐநா கவலை வெளியிட்டுள்ளது.