குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் 154 பாலை மர தீராந்திகளுடன் நின்ற உழவு இயந்திர சாரதியை கைதுசெய்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் உழவு இயந்திரத்தினையும் தீராந்திகளையும் கைப்பற்றியுள்ளனர்
குறித்த பகுதியில் மரம் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு காவல் நிலைய கடமை நேர காவல்நிலைய பொறுப்பதிகாரி எஸ் கே பண்டார தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவ்வாறு உழவு இயந்திர சாரதியை கைதுசெய்ததோடு உளவு இயந்திரத்தினையும் தீராந்திகளையும் கைப்பற்றியுள்ளனர்
மேலதிக விசாரணையை நடத்திவரும் காவல்துறையினர் பொருட்களையும் நபரையும் 7 ம் திகதி நீதிமன்றில் முர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்