186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூவரசர் பட்டினம் என்னும் புராதன நாமத்தோடு விளங்கும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயம் ,மூவிராசாக்கள் காணிக்கை திருவிழா, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெணான்டோ ஆண்டகை அவர்களின் குருத்துவ வாழ்வில் 45 ஆவது நிறைவாண்டு மற்றும் இந்தியா டிவைன்ஸ் தியான இல்லத்தில் போதகர் அருட்தந்தை றப்பயல் அவர்களின் குருத்துவ வாழ்வின் 15 ஆவது ஆண்டு விழா முப்பெரும் விழாவாக புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை இடம்பெற்றது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை தேவராஜா கொடுத்தோர் அடிகளார் அவர்களின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
Spread the love