131
அரச மற்றும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்று நிருபம் சிறப்பானது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன்படி அனைத்து அமைச்சர்களும் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love