வட மாகாணத்தின் சில மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் விவசாய அமைச்சின் அதிகாரிகளும் காப்புறுதி அதிகாரிகளும் ஈடுபடுவர் என விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
உர நிவாரண திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏற்கனவே காப்புறுதி திட்டத்தில் இணைந்து கொண்டமையினால் அதனூடாக நட்டஈட்டு கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனடிப்படையில் ஒரு ஹெக்டெயர் பயிர் நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.