திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் திகதி நடத்தப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தன.
அத்துடன் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் இன்னும் தொடர்வதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இடைத்தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையகம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்துள்ளது.