கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் தீவு பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த நிலையில் நேற்று மாலை அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியுள்ளது. அத்துடன் நிகோபார் தீவு பகுதிகளும் புயலின் தாக்குதலுக்கு உள்ளானதினால் பல இடங்களில் பலத்த மழையும் பெய்துள்ளது. புயல் அந்தமானை தாக்குவதற்கு முன்பாகவே வலு இழந்து போனதால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கவில்லை. அதன்பின்னர் பாபுக் புயல் ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென்கிழக்கு வங்காள வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.
புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது முன்னதாகவே பபுக் புயல் குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது