சீனாவில் வாழும் முஸ்லிம் மக்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நிலையில் அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த போதும் இதனை சீனா மறுத்திருந்தது
மேலும் சீனாவில் சில பகுதிகளில் நோன்பிருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து ஹிஜாப அணிவது போன்ற முஸ்லிம் மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது சட்டவிரோதமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுகின்றனரர்
இந்நிலையில், சீனாவில் வாழும் முஸ்லிம்களை, சீன பழக்க வழக்கங்களுக்கும் கலாச்சாரத்துக்கும் மாற்றும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சீனர்களின் உணவு பழக்க வழக்கம், தொழில், கல்வி, மொழி, சட்டம், வாழ்க்கை முறை, அரசியல், , மதம், கலாச்சாரம் உள்ளிட்ட என அனைத்து விடயங்களையும் மற்ற சமூகத்து மக்களும் பின்பற்ற செய்யும் புதிய சட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சீனாவில் வாழும் முஸ்லிம்களை படிப்படியாக சீன மயமாக்கலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த சட்டத்தை எவ்வாறு அமுல்படுத்தப் போகிறார்கள் என்னும் விவரம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.