குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 7ஆயிரத்து 892 குழந்தைகள் பிறந்துள்ளன. 2017ஆம் ஆண்டு 8ஆயிரத்து 152 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 572 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 796 குழந்தைகளும் பிறந்துள்ளன.
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 833 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 839 குழந்தைகளும் பிறந்துள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 498 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 516 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 576 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 880 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இவ்வாறாக வடமாகாணத்தில் 2016 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 371 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 182 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதன் பிரகாரம் 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 811 குழந்தைகள் அதிகமாக பிறந்துள்ளன என வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 comments
வட மாகாணத்தில் 811 குழந்தைகள் அதிகமாக பிறந்தன என்று கருவளம் நலிவடைந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் பெருமை அடைய போதுமான தரவுகள் இன்னும் வரவில்லை. முதலாவதாக அதிகரிப்பானது மிகச் சிறியதாக இருக்கிறது என்பதுடன் இந்த அதிகரிப்பானது தென்பகுதியில் இதே காலப் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புடன் ஒப்பிடப்பட வேண்டும். இரண்டாவதாக பிறந்த குழந்தைகளின் விபரங்கள் இன ரீதியாக கணக்கிடப்பட வேண்டும். முக்கியமாக முஸ்லிம்கள் வடக்கில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்கள் அதிக கருவளத்தைக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு அதிக குழந்தைகள் இக் காலப் பகுதியில் பிறந்திருக்கலாம் என்பதும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்
வட மாகாணத்தில் 2016 மற்றும் 2017 வருடங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 31554 ஆகும். அவர்களில் எத்தனை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் என்று வடமாகாண சுகாதார திணைகளம் தெரிவித்தால் மேலும் தெளிவாக இருக்கும்.