சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுமுறையில் அனுப்பியது தவறு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்த வழக்கு விசாரணையை கடந்த டிசம்பர் 6ம் திகதி நிறைவு செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா சுற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து ஏற்பபட்ட அதிகார மோதல்கள் காரணமாக மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுமுறையில் அனுப்பியிருந்த நிலையில் இதற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சிபிஐ பணி நியமன விதிப்படி இயக்குனரை கட்டாய விடுமுறையில் மத்திய அரசு அனுப்பியது தவறு என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது