வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
இதன்போது வடக்கு மாகாணத்தின் நிலவரங்கள் தொடர்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் புதிய ஆளுநர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கின் புதிய ஆளுரான நியமனம் பெற்ற சுரேன் ராகவன், நாளைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்கும் விதமாக யாழ்ப்பாணம் வருகின்றார். யாழ் சுண்டுக்குளியில் உள்ள ஆளுநர் அலுவலத்தில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.