199
சிங்கராஜ தேசிய வனத்திற்கான லங்காகம – கெகுனஎல்ல பகுதியில் வீதி அபிவிருத்தி என்னும் பெயரில் பாரிய காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய அமைப்பாளர் வேகடவல ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சிங்காரஜ வனம் இரண்டாக பிரியும் ஆபத்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் ஊடாக எவ்வித சூழல் பதிப்பும் ஏற்படப் போவதில்லை என வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
Spread the love