இந்தியாவின் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா பாராளுமன்ற மக்களவையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேறியுள்ளது
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் பாராளுமன்றின் மக்களவையில் தாக்கல் செய்த மசோதா மீதான வாக்கெடுப்பு இரவே இடம்பெற்றது.
காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு ஆதரவு வழங்கியமையினால் மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மூவர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
இந்த இடஒதுக்கீட்டால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள் எனவும் இதனால் பட்டியல் சாதி, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் வராது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது