அமெரிக்காவின் நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். நாசா மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு டி.இ.எஸ்.எஸ் செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியிருந்தது. இந்த செயற்கை கோள் கண்டுபிடித்துள்ள சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புதிய மிகச்சிறிய கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.
இதற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரம் காணப்படுகிறது. இது குளிர்ச்சியான கிரகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ள இந்த கிரகத்தில் பாறைகள் உள்ளதனால் உயிரினங்கள் வாழ தகுதியுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டள்ளனது. இங்கு அதிகளவில் வாயு நிரம்பியுள்ளது எனவும் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளதனால் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.இ.எஸ்.எஸ் விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது