சர்வதேச நாணய நிதியத்தின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் வோஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாக விளங்குகின்றன.
கடந்த முதலாம் திகதி சர்வதேச நாணய நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31ம் திகதி ஓய்வு பெற்றதை தொடர்ந்தே அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாhர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் கீதா கோபிநாத் இந்தியாவினை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது